● எஸ். சரசுவதி, வேளச்சேரி.

என் மகன் பெருங்காப்பியனுக்கு 1-11-2009-ல் திருமணம் நடந்தது. தற்சமயம் விவாகரத்து வழக்கு ஏழு வருடமாக நடக்கிறது. வழக்கு எப்பொழுது முடியும்? மறுமணம் எப்போது நடக்கும்? அவனு டைய எதிர்காலம் எப்படி அமையும்?

Advertisment

பெருங்காப்பியன் தனுசு லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. 2019 ஜூலையில் 45 வயதாகிறது. 2019 மார்ச் முதல் சனி தசை, சந்திர புக்தி ஆரம்பம். அவருடைய திருமணத் தேதி கூட்டு எண் 5. எப்போதும் ஒருவருக்கு திருமணம் 4, 5, 7, 8 தேதிகளில் நடக்கக்கூடாது. அப்படி நடந் தால் சேர்ந்து வாழ முடியாது. குழந்தை பிறக்காது. மேலும், 7-க்குடைய குரு 6-ல் மறைவு. செவ்வாயை சனி பார்ப்பதும் களஸ்திர தோஷம். வழக்கு முடிய திருவெண்ணெய்நல்லூர் சென்று மங்களாம்பிகை உடனுறை தடுத்தாட் கொண்டநாதரை வழிபடவும். தொடர்புக்கு: ரவி, தொலைபேசி: 04153-234548. அர்த்த நாரீஸ்வரர் 99942 70882. அடுத்து மறுமணம் நல்ல முறையில் நடக்க காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொண்டு புனர்விவாக ஹோமம் செய்யவும்.

● எஸ். இளங்கோ, மதுரை.

எனது ஆயுள், எதிர்காலம் எப்படி யிருக்கும்?

66 வயது நடக்கிறது. 62 வயது முதல் சுக்கிர தசை. இறைவன் நினைவுடன் காலத் தைக் கடத்தவும்.

● பி. வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை.

கடந்த 28-11-2018-ல் கீழே விழுந்து வலது தொடை எலும்பு முறிந்தது. கால் ஆபரேஷன் செய்து பிளேட் வைக்க வேண்டும் என்றார்கள். நான் பயந்து கெண்டு நாட்டு வைத்தியம் பார்க்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் தெரிகிறது. வாக்கர் வைத்து நடக்கிறேன். பூரண குணமாகுமா?

Advertisment

78 வயது முடிந்து 79 ஆரம்பிக்கப்போகிறது. வயது முதிர்வு காரணமாக எலும்பு சேர்வது கடினம். நாட்டு வைத்தியம் தொடர்ந்து பார்க்கவும். காஞ்சிபுரம் அருகில் மாகறல் என்ற ஊரில் (உத்திரமேரூர் பாதை) திரிபுவன நாயகி உடனுறை திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமி உடும்பீஸ்வரர். உடும்பு வால் போன்ற திருமேனி. அங்குபோய் சுவாமி- அம்பாளுக்கு அபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: சண்முக சுந்தர குருக்கள், செல்: 94448 10396. பன்னிரு திருமுறையில் 3-ஆம் திருமுறை "விங்குவிளை கழனிமிகு' என்ற பதிகத்தை தினசரி பாரா யணம் செய்யவும். "பலன் தரும் திருமுறைப் பதிகங்கள்' என்ற புத்தகத்தை வரவழைக்க வும். குமரிப் பதிப்பகம், 19, ராமநாயக்கன் குளத்தெரு, 2-ஆவது மாடி, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001. தொடர்புக்கு: செல்: 94439 74344, 89031 53420.

jothidamanswer

● எம். திருவேங்கடம், பெரம்பூர்.

என் மகன்- மருமகள்- பேத்தி ஜாதகங் களை அனுப்பியுள்ளேன். திருமணமாகி நான்கு ஆண்டுகளாகின்றன. தனியாகக் குடிவைக்க வேண்டும் என்று மருமகளின் தாய்- தந்தை தேவையில்லாமல் சண்டை போட்டு, தன் மகளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். மகன் மிகுந்த மனக்கவலையோடு இருக்கிறான். இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? என்ன பரிகாரம்?

மகள் புகுந்த வீட்டில் வாழப்பிடிக்க வில்லை என்றால் ஏன் கட்டிக்கொடுக்க வேண்டும்? பிறந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. இப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் "வாழ்கிற வீட்டில் வன்குரங்கு புகுந்தாற்போல' குட்டி கலாட்டா செய்து, பெற்ற பிள்ளையின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள். ஒரு நல்ல வக்கீலைப் பார்த்து "சேர்ந்துவாழ வருகிறாயா? அல்லது விவாகரத்து தருகிறாயா' என்று மருமகளுக் கும், சம்பந்திகளுக்கும் நோட்டீஸ் அனுப் புங்கள். அப்போதுதான் அவர்களுக்குப் புரியும்! பேத்திக்கு 2016 முதல் ராகு தசை. மருமகளுக்கு குரு தசை, ராகு புக்தி. மகனுக்கு அடுத்து 2020 நவம்பரில் ராகு தசை வரப் போகிறது. அக்காலம் குடும்பத்துடன் சூலினி துர்க்கா ஹோமம் செய்து அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். அதற்குமுன்னால் தஞ்சை- திருவையாறு பாதையில் பெரும்புலியூர் சென்று உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை, பூஜை செய்யவும். உங்கள் மகன் போனால் போதும். மருமகள் போகத் தேவையில்லை. தொடர்புக்கு: சுவாமிநாத குருக்கள், செல்: 99409 31425, 99423 09309.

● இரா. சரவணகுமார், தஞ்சாவூர்.

"காரகோ பாவநாசம்' என்ற ஜோதிட விதிப்படி, 5-ல் குரு இருப்பதால் எங்களுக்கு புத்திர தோஷம் உள்ளது என்கிறார்களே- உண்மையா? புத்திரப் பிராப்தம் எப்பொழுது ஏற்படும்?

சரவணகுமார் பூச நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னம். துர்க்கா தேவி உத்திராட நட்சத் திரம், மகர ராசி, கடக லக்னம். சரவணகு மாருக்கு 5-ல் குரு உச்சம். சந்திரன் ஆட்சி. புத்திர தோஷம் ஏற்படாது. துர்க்கா தேவிக்கும் கடக லக்னத்துக்கு 9-க்குடைய குரு 5-ல் திரிகோண பலம்பெற்று, 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தோஷமில்லை. மனைவிக்கு ராகு தசை, சந்திர புக்தியும் ஏழரைச்சனியும் இணை வது தோஷம். திங்கட்கிழமைதோறும் சிவலிங் கத்துக்கு காலையில் பாலாபிஷேகம் செய்து வழிபடவும்- சந்திர புக்தி முடியும்வரை. சனிக் கிழமைதோறும் காலபைரவருக்கு 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய் விளக்கில் நனைத்து தீபமேற்றவும். (ஏழரைச் சனி முடியும்வரை). காரைக்குடி சுந்தரம் குருக் களிடம் (செல்: 99942 74067-ல்) பேசி புத்திர தோஷ நிவர்த்திக்கும், நல்ல குழந்தை பிறக்கவும் சந்தான கணபதி ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் உள்பட சுமார் 19 ஹோமத்துக்குமேல் செய்து, தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

● வி. தீபாசெல்வி, ஈரோடு-2.

தற்போது பணியில்லை. எப்போது வேலை கிடைக்கும்? என் பெயரில் உள்ள காலி மனை எப்போது விற்கும்? ஆயுள் தீர்க்கமா?

28 வயதில் எதற்கு ஆயுளைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்- கற்பனை பயமா? சூரிய தசை, சனி புக்தி முடிந்ததும், புதன் புக்தியில் வேலை கிடைக்கும். ஈரோடு மாட்டுச்சிலை ரவுண்டானா அருகில் சின்னீஸ் ஹோட்டல் எதிர்ப்புறம், பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், கதவெண்: 402, சீதாராம் சாமி என்ற குருநாதர் இருக்கிறார். அவரைச் சந்தித்து ஆசிபெறவும். அவர் அருள்வாக்கு சொல்லுவார். சனிக்கிழமை மௌன விரதம். மற்ற நாளில் போகவும். பழங்கள் வாங்கிப் போகவும். தொடர்புக்கு: செல்: 98433 11741. அத்துடன் மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமிநரசிம்மருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: செல்: 94435 15904.

● கே.என். சரவணன், கோவை.

எனது தம்பி மோகனசுந்தரத்துக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எம்.எஸ்ஸி., பயோடெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார். எங்களது பங்காளி பாட்டி இறந்துவிட்டதால் ஆறு மாதம் அடைப்பு தீட்டு வருகிறது. நாங்கள் கோவிலுக்குச் செல்லுவதில்லை. இந்த சமயத்தில் புதிய தொழில், புதிய முயற்சிகளைச் செய்யலாமா? கோவிலுக்குப் போகாமல் இருப்பது கவலையளிக்கிறது.

பங்காளி தீட்டு முடியும்வரை வீட்டி லேயே மனதுக்குள் இறைவனை வழிபட்டு ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தொடங்கத் தடையில்லை. ஆனால் திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற மங்கள காரியங்களைத் தள்ளிப் போடவும். தேங்காய் உடைத்து, பழம் வைத்துப் பூஜை செய்யக்கூடாது. சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. மலைக்கோவில் ஏறக்கூடாது. தீட்டு முடிந்ததும் தம்பி மோகனசுந்தரத்துக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்து கலசஅபிஷேகம் செய்தால் உடனே பெண் அமையும். காரைக்குடி சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

● ரா. சண்முகநாதன், மயிலாப்பூர்.

எனக்கு உத்தியோக மாறுதல், நிரந்தர வேலை எப்போது அமையும்? அரசுத் தேர்வு எழுதியுள்ளேன். தனியார் கல்லூரி அல்லது அரசு வேலை அமையுமா? அல்லது வெளிநாடு போகலாமா?

32 வயது நடக்கிறது. திருவோண நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னம். 2020 வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. அதுவே உங்களுக்கு நிரந்தர வேலையையும், முன்னேற்றம், திருப்தியான வருமானத்தையும் தடுக்கிறது. மேலும் குரு தசை 2029 வரை. குரு 12-ல் மீனத்தில் மறைவு, ஆட்சி. ராகு சம்பந்தம். எனவே அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அமையலாம். சென்னை ஆவடி சாலையில் திருவலிதாயம் சென்று (பாடி) வல்லீஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக பூஜை செய்யவும். ஞானசம்பந்த குருக்கள், தொலைபேசி: 044-26540706-ல் பேசி ஏற்பாடு செய்யவும்.